கும்பகோணம், மே. 08 –
கும்பகோணம் அருகேவுள்ள பெருமாண்டி ஊராட்சி புதுராம்நகர் நடைப்பெறும் ஆனந்த மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ கொப்பரை, பால்குடம், காவடிஅலகு, மற்றும் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
கும்பகோணத்தில் பெருமாண்டி புதுராம்நகரில் உள்ள ஆனந்த மாரியம்மன் கோவில் ஆலயத்தில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 30ஆம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி பகவத் காவிரி ஆற்றிலிருந்து வேல் சக்தி கரகம் அக்னிசட்டி பால்குடம் காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. பின்பு அம்மனுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆனந்தமாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதியம் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை சிறப்பு அலங்காரமும் அதனைத் தொடர்ந்து 10ம் தேதி அம்பாள் வீதி உலாவும் அதனைத் தொடர்ந்து முளைப்பாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது வருகிற 12ம் தேதி பேச்சியம்மன் படையலும் விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் புதுராம்நகர் தெருவாசிகள் நாட்டாமைகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.