திருவாரூர், செப். 14 –

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும்  உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர்களாக நியமயணம் செய்ததை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும். டிபிசிகளில் ஏற்படும் இயற்கை இழப்பு தொகையை வழங்குவதற்கு பணியாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். ஒப்பந்தம் மூலம் சுமை தூக்குவோரை நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை 12/3  ஒப்பந்தப்படி நிரப்பிட வேண்டும். சுமை தூக்குவதற்கு காலம் முறை ஊதியம், நிர்ணயம் செய்ய வேண்டும். ஆகிய ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் உள்ள  நுகர்பொருள் வாணிப மண்டல அலுவலகம் முன்பு TNCSC எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பாக மண்டல செயலாளர் மயில்வாகனன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மதிய உணவு இடைவேளையின் போது கருப்பு பேட்ச் அணிந்து  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணைத் தலைவர் இளையராஜா,  மண்டல துணை செயலாளர் ஜெயக்குமார், மற்றும் அன்பழகன், பாஸ்கர், கனகராஜ், மோகன் உள்ளிட்ட மண்டல அலுவலக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here