தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு….
தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிறுவனத்தின் 26 வது கிளை தஞ்சையில் தொடங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி ஆகியோர் ரிப்பன் வெட்டி. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்..
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரண் வேல் பேட்டியளிக்கும் போது …
இன்றைக்கு மொபைல் இல்லாமல் யாரும் இல்லை. அப்பா அம்மா அண்ணன் தம்பி உறவுகளுடன் பேசுவதை விட மொபைலில் நேரம் கழிப்பதுதான் அதிகமாக உள்ளது. மொபைலில் பேசி பேசி இன்றைக்கு யாருமே பேசுறதே இல்லை. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் மொபைலில் மட்டும்தான் பேசுகிறார்கள்.
மேலும் தொடரந்து மொபைல் பார்த்து வருவதால் யாரும் தூங்குவதே இல்லை. சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டிய தூக்கம் கூட தூங்குவது இல்லை. சாப்பிடுவதை கூட மறந்து விட்டார்கள்.
இதனால் முடி உதிர்வதும், தோல் பாதிப்பும் ஏற்படுகிறது. இன்றைக்கு 20 முதல் 25 வயதிலேயே முடி உதிர ஆரம்பிக்கிறது. முடி மற்றும் தோல் எவ்வளவு முக்கியம் என்றால் ஏக்கர் அளவில் நிலம் இருக்கலாம் தங்கம், வைரம் நகைகள் இருந்தாலும் 25 வயது பையனுக்கு தலையில் முடி இல்லை என்றால் திருமணம் நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.