பழவேற்காடு, ஏப். 13 –

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு குளத்துமேடு குப்பம் பகுதியில் சுமார் 245 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை,. குடும்ப அட்டை,  ஆதார் கார்டு. ஆகியவை வழங்கப்பட்டுள்ளன

மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளும் பெறுகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக ஏற்கனவே 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும். அதனை முறைப்படி பிரித்து வழங்க வேண்டும் என வட்டாட்சியர் முதல் .மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்காததால் அந்த இடத்தை தற்காலிகமாக தங்களது கட்டு மரங்களையும், மீன்பிடி வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில்  தனிநபர் ஒருவர் திடீரென அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி வருவதோடு ஆவணங்கள் தயார் செய்து அதிகாரிகளின் துணையோடு இன்று தடுப்பு வேலி அமைக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் சர்ச்சைக்குரிய இடத்தை முற்றுகையிட்டு தடுப்பு வேலி அமைக்க வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் இலவச வீட்டுமனை கேட்க அரசு ஒதுக்கிய நிலத்தை முறையாகப் பிரித்து தங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு தங்களுக்கு நிலங்களை பிரித்து கொடுக்காவிட்டால் சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பழங்குடியின மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here