பொன்னேரி, ஏப். 05 –
கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் தமிழகம் முழுவதும், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல் அமைத்து அவர்களின் தாகம் தீர்க்க உதவிட வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அழகிரி மற்றும் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர்கள் கட்சியினருக்கு ஆணை பிறப்பித்திருந்தனர்.
அதன் தொடர்சியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் பொது மக்களுக்கு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகர இணைப்புச் சாலையும் ஒன்று இணையும் இடத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இன்றைய முதல் நாளில் தர்பூசணி பழங்கள். மோர் .இளநீர். வெள்ளரிப்பிஞ்சு .குடிநீர். உள்ளிட்டவைகளை அமைத்து காங்கிரஸார் பொது மக்களுக்கு வழங்கினர். இதில் மாவட்ட விவசாய அணி தலைவர் அரவிந்தன் .மாவட்ட கவுன்சிலர் தயாளன் .ஆரணி நகர தலைவரும் மற்றும் பேரூராட்சி துணை தலைவருமான சுகுமாரன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலாஜி. வில்சன். திருப்பாலைவனம் வினோத். மீஞ்சூர் காமராஜ். ஏலியம்பேடு சரவணன். ஆலாடு பரசுராமன்.உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.