பொன்னேரி, ஜூன். 27 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி நீதிமன்றம் விசாரணைக்கு பரித்துரை செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் இத் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வழக்குகள் அனைத்தையும் பொன்னேரி நீதிமன்றத்திலே நடத்திட வேண்டும் எனக் கோரிக்கைகளை விடுத்து இத்தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அவ்வழக்கறிஞர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு மாற்றுவதால், பொதுமக்களுக்கும் மற்றும் வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுவதாகவும், இம்முடிவினை பொன்னேரி நீதிமன்றம் கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்போராட்டத்தின் முதல் நாளான இன்று, நீதிமன்றத்தின் எதிரே கண்டன முழக்கங்களை வழக்கறிஞர்கள் எழுப்பி தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களின் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.






















