புதுச்சேரி, மே. 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 6-ம் தேதி வெளியானது, இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் வளர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் ஆர்வமாக இருந்தாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு படி மேலாக சென்று மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் செய்த நெகழ்ச்சி சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. புதுச்சேரி, திருபுவனை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் வகையில்,

திருபுவனை காவல் நிலையத்திற்கு அழைத்த உதவி ஆய்வாளர் இளங்கோ, பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கௌரவப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உதவி ஆய்வாளர் இளங்கோ தனது கையால் தலைவாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறு சுவையோடு பரிமாறி மாணவ மாணவிகளையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார். வயிறார உண்டு மகிழ்ந்த மாணாக்கர்கள் தங்களை கௌரவப் படுத்திய காவலர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here