திருவாரூர், ஜன. 12 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல், மஞ்சக்குடி மற்றும் செருகளத்தூர் கிராமங்களில் இன்று சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாளை ஜெயந்தி விழாவாக அனுசரித்து புஷ்பாஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.
மேலும் இவ்விழாவில், சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுஅவரது திருஉருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் தர்ம ரக்ஷண ஸமிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மலர் தூவி புஷ்பாஞ்சலியும், தீபம் ஏற்றியும் மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து, விவேகானந்தர் பொன்மொழி வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டு காகிதப் பிரசுரம் பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து அனைவரும் உறுதி மொழியும் எடுத்து கொண்டனர். மேலும் இன்றைய இளைஞர்களின் சீர்கேடு மற்றும் நிலைபாடுகள் குறித்தும் அந்நிகழ்வில் பங்கேற்ற இந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பேட்டியளித்தனர்.
பேட்டி : 1.சிவசங்கரன் பாஜக
2.சங்கர் மாவட்ட தலைவர் தர்ம ரக்ஷண ஸமிதி
3.மதியழகன் சமூக ஆர்வலர்
4.சுந்தர்ராஜன் சமூக ஆர்வலர்
5.ரெங்கநாதன் சமூக ஆர்வலர்