கும்மிடிப்பூண்டி, ஏப். 10 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் தாயார் சரோஜம்மாள் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன்  அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவர் ..

தமிழக அரசின் சொத்துவரி உயர்வு என்பது அனைத்து வித மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், பெரும் சுமையாகவும் உள்ளது அச்சுமையினை குறைக்கும் விதமாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் தமாக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற இருப்பதாக அப்போது தெரிவித்தார்.

மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பெட்ரோல் டீசல் விலையுர்வினால் மக்களுக்கு பாதிப்பு உள்ளது என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருப்பினும் இது இந்திய அளவில் மட்டமில்லாது சர்வதேச பிரச்சினையாக உள்ளது. மேலும் ஈரான் உக்ரைன் போரின் அடிப்படையில் இப்பிரச்சினை தொடங்கி உள்ளது

அதன் காரணமாகதான் இந்த கிடு கிடு வென உயர்ந்து வரும் விலைவுயர்வு. மேலும் பல நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் விலைக் குறைவாகதான் உள்ளது. இருப்பினும் மேலும் உயராமல் அதனை மத்தியரசு பல்வேறு ஆய்வுகளை நடத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளையும், அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, தமாகா செந்தில், என் ஆர் கே தாஸ், பொன்வேல், காமராஜ், முருகேசன், ராமாபுரம் மோகன், வெங்கடேதிபாளையம் சீனிவாசன், ராஜாங்கம், தீர்த்தலிங்கம், ராகவரெட்டிமேடு ரமேஷ், அறிவழகன், நரேந்திரன்  நாகலிங்கம் என திரளானோர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here