தஞைசாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
புதுச்சேரி 9 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன் என வினாவினார். தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை மேலும் அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் சின்ன சம்பவம் நடந்தால் அதை பெரிய அளவிற்கு கொக்கரிப்பார்கள் பா.ஜ.க வினர் என சாடினார்.
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வழியாக மயிலாடுதுறை சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்டம் சார்பில் மேல வஸ்தாச்சாவடி அருகில் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி ஜி ராஜேந்திரன் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை ..
திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது எனவும், மேலும் எங்களுக்குள் எந்த இழுபறியும் இல்லை என்றவர், தமிழ்நாட்டு மக்களின் ஆன்மாவாகவும், மனசாட்சியாகவும் திகழ்ந்துக் கொண்டிருப்பவர் முதல்வர் அதேபோல் இந்தியா கூட்டணியின் மனசாட்சியாக அவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் ஒருபோதும் இழுபறி இல்லை நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும், அதனைத்தொடர்ந்து ஒரு சுமுகமான தீர்வு ஏற்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்கள் மனசாட்சியாக இருக்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் இந்திய கூட்டணி மனசாட்சியாக விளங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அடிப்படையில் காங்கிரஸ் பேரியக்கத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டார் எங்களது அளவுகோலை புரிந்து வைத்திருக்கிற ஒரே முதலமைச்சர் அவர்தான் என்றார்.
புதுச்சேரியில் ஒன்பது வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வாய் திறக்கவில்லை வானதி சீனிவாசன் எதற்கெடுத்தாலும் பேசும் வானதி சீனிவாசன் பேசவில்லை. மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ வாய் திறக்கவில்லை தமிழ்நாட்டில் சின்ன சம்பவம் நடந்தால் அதை பெரிய அளவிற்கு கொக்கரிக்கும் அவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு பாஜக ஏன் நீதி கேட்கவில்லை என வினாவினார்.
மேலும் பாஜக ஆளாத மாநிலங்களில் சிறு துரும்பை கிள்ளி போட்டாலும் அதை பெரிதாக பேசுவார்கள் இதுதான் பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என செல்வபெருந்தகை குற்றம் சாட்டினார்.