பழவேற்காடு, மார்ச். 28-
பழவேற்காட்டில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை திருவள்ளூர் மாவட்டம் சார்பில். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ். (கே.சி.சி) மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள். பராமரிப்பு கடன், கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கடன் .மகளிர் குழுக்களுக்கு கடன். உள்ளிட்ட உதவி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பயனாளிகளுக்கு 8 கோடியே 34 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அந்தோணிசாமி. ஜான்பீட்டர் ,உள்ளிட்டவர்கள் வழங்கினார்.
இதில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் முருகன், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் விஜயகுமாரி மற்றும் பனப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மெதூர், தேவம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் திருப்பதி .மற்றும் சசிகுமார், பழவேற்காடு மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் செல்வம், கூனம் குப்பம் கிராம நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.