கும்பகோணம், ஜூன். 04 –

கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனத்தின் 22-வது ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் துணை முதல்வர் தங்கமலர்  கல்லூரி முதல்வர் சசிகுமார்  மற்றும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளை பாராட்டியும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழும், பரிசுகளும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது கல்வியை கற்பதோடு மற்றும் அல்லாமல் கற்ற கல்விக்கு ஏற்ப வாழ்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அனைவரும் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார். விழாவில் சென்னை மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசகர் ஜாபர் அலி, சென்னை சைபா ட்ரீ (Sypa Tree)  நிறுவனர் முகமது ரபீக், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் விமலா, நர்சிங் கல்லூரியின் முதல்வர் ரோஸ்லின் மெரிட்டா, மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் முதல்வர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நர்சிங் கல்லூரியின் பொறுப்பாளர் கலையரசி  நன்றியுரையாற்றினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here