மீஞ்சூர், ஏப். 06 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராமநாதபுரம் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 1330 குறட்பாக்களை ஒப்புவித்த 20 மாணவர்களுக்கும், முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்கும் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கினார். மேலும், இவ்விழா இப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.பிரேமா தலைமையில் நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றியக் குழுத் தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி, மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர்கள் கௌரி, நளினி, வாயலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபி, ஒன்றிய கவுன்சிலர்  மகாலட்சுமி பிரகாசம், துணைத் தலைவர் ராஜேஷ், ராமநாதபுரம் தசரதன், சிவாஜி வார்டு உறுப்பினர்கள் ஜீவிதா சீனிவாசன், குமார், ஆனந்தன், ரவிச்சந்திரன், சுரேஷ், பிரகாசம், கஜேந்திரன் தன்னார்வலர்கள் காயத்ரி நந்தகோபால், லோகநாதன், பாபு, கணேஷ், சுந்தரராஜ், முருகன், ராமராஜ் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மகேந்திரன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி மூலம் திருக்குறளை ஒப்புவித்தல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும், பல்வேறு நடன கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன, இதில் திரளான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர், இறுதியில் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here