திருவாரூர், ஜூன். 05 –

இன்று சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் வெகுச்சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருவாரூரில் முன்னாள் தமிழக முதல்வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய மாநில பொது செயலாளர் ரமேஷ் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து, மரக்கன்று நடும் பணியினை மேற்கொண்டனர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் மூலம் நாம் அனைவரும் நலமுடனும் ஆரோக்கியமாகவும் வாழலாம் எனவும், மேலும் மாசுயில்லா நாடாக நம் நாடும் இருக்குமெனவும், அதுப்போன்று ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடும் விதமாக ( ஜூன் 5 ) ஆம் தேதியை பொது முடக்க நாளாக அறிவித்து, விடுமுறை அளித்து அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, அன்று நாள் முழுவதும் மரக்கன்றுகளை நடும் பணி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here