கும்பகோணம், டிச. 26 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு கும்பகோணம் மாநகரம் முழுவதும் உள்ள சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவர்களின வீடுகள் வண்ண விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்டும், ஸ்டார்களை ஒளிரச் செய்தும், மற்றும் வண்ண வண்ண நிறங்களினான தோரணங்களால் கட்டப்பட்டு இருந்தது.

மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சர்ச், வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பேராலய ஆயர் அந்தோணிசாமி, அனைவரிடமும் காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து வந்து அந் நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here