கும்மிடிபூண்டி, டிச. 31 –
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 துவக்க விழாவை முன்னிட்டு நன்கொடை வசூலிப்பது, மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். முன்னதாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகருக்கும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அக்கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி நகரத் தலைவர் பிரேம்குமார், வட்டாரத் தலைவர்கள் புருசோத்தம்மன், பெரியசாமி, செயசீலன், வினோத், குணசேகர், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சம்பத் மகிலா காங்கிரஸ் ஜோதி சுதாகர், மாவட்டத் துணைத் தலைவர் மதன் மோகன், பொன்னேரி நகர தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். அக் கூட்டத்தின் நிறைவில் ஓ பி சி அணி மாவட்ட தலைவர் என். வெனிஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.






















