காஞ்சிபுரம், பிப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம்,வருவாய் துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணா விரத மற்றும் தற்செயல் விடுப்பு போராட்டம்  நடைபெற்றது. மேலும் இன்று முதல் தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் அலுவலக போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறையினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அத் தர்ணா போராட்டத்தில் செயலாளர் S. நவீன் குமார், பொருளாளர் G.தயாளன் ஆகியோர் முன்னிலையில் தலைவர் S.மகாலிங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் பங்கேற்று,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்,அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்,2024 – பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும்,அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here