அம்பத்தூர், பிப். 05 –

தமிழ்நாடு பா.ஜ.க வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் கிஷோர்ஜி யிடம் அம்பத்தூர் எம்கேபி நகர் பேஸ் 2 ல் இயங்கி வரும், குடியிருப்பாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிர் வரும் 25 ஆம் தேதி செல்வதற்காக முன்பதிவு செய்வதற்கான லிஸ்டினை வழங்கினார்கள்.

மேலும் இந் நிகழ்வில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக மண்டல தலைவர் கிஷோரிடம் நலச்சங்கத்தின் தலைவரும், தம்பட்டம் நாளேட்டின் அம்பத்தூர் சட்டமன்ற செய்தியாளரும், பப்ளிகேசன் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் தா. முருகன் தலைமையில், நலச்சங்கத்தின் து.தலைவரும் தம்பட்டம் பப்ளிகேசன் அலுவலக மேலாளருமான வைரப்பெருமாள், அம்பத்தூர் MKB நகர் பேஸ்-2 வின் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்.அய்யத்துரை R td. ஆய்வாளர் மற்றும் துணைச் செயலாளர் குமார் ஆகியோர் நேற்று மதியம் 2 மணியளவில் BJP அலுவலகமான கமலாலயத்தில் அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவிலுக்கு எதிர் வரும் 25.2.2024 அன்று காலை 4.05 மணியளவில் செல்வதற்கான டிக்கட் போடுவதற்கான கோரிக்கை மனு மற்றும் அங்கு செல்பவர்களுக்கான பட்டியலை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here