நன்னிலம், மார்ச். 20 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் சுமார் 24 கடைகளோடு வணிக வளாகம் அமையப்பெற்ற இப் பேருந்து நிலையம், மேலும் இப்பேருந்து நிலையம் கடந்த 22/11/2012 அன்று திறந்து வைக்கப்பட்டது..

இந்நிலையில், திறந்து வைக்கப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை மற்றும் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை, அதனால் பேருந்துகளும் அப்பேருந்து நிலயத்திற்குள் வருவதில்லை என தெரிய வருகிறது.

மேலும், நன்னிலம் பகுதியில் இருந்து சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி,காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு சுமார் 40 பேருந்துகள் வந்து செல்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2019- ம் வருடம், சுமார் ரூ. 3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, நன்னிலம் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மேலும் இப்பேருந்து நிலையம் கடந்த 22. 11. 2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வியாபாரிகள்.. ரூ. மூன்று லட்சம் பணத்தினை பேரூராட்சிக்கு முன்பணம் செலுத்தி ஏலம் எடுத்துள்ளனர்.

இதுக்குறித்து நன்னிலம் புதிய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் சொல்லும் போது, ‘திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத காரணத்தினால்.. பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் வருவதில்லை.. அதனால்  வியாபாரம் நடைபெறவில்லை.. எனவும், கடை திறந்தும் வியாபாரம் இல்லாத நிலையில்  எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும்… கூறினர்..

மேலும், பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.. இதன் காரணமாக கடை ஏலம் எடுத்த வியாபாரிகள் சிலர் கடையை திறக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேட்டிகள்:

  1. கண்ணன் – வியாபாரி
  2. செல் சரவணன்- வியாபாரி

(நன்னிலம் புதிய பேருந்து நிலையம்.)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here