சென்னை, ஜன. 3 –

சென்னை வேளச்சேரியில் பழைய குப்பை பொருட்களை எடுக்க வருபவர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் வழக்கறிஞர் வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகார் அளித்தால் புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறார். 

சென்னை வேளச்சேரி நியூ செகரிட்ரேட் காலனி 6 வது தெருவில் வழக்கறிஞர் செல்வராஜன் வசித்து வருகிறார். இன்று தனது வீட்டில் வைத்திருந்த இரும்பு கேட்டை காணவில்லை என பார்த்துள்ளார். அவருடைய வீட்டில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை சோதித்து பார்த்த போது சாலையில் வீசப்படும் அட்டை போன்ற பழைய பொருட்களை எடுப்பவர்கள் போல ஒருவர் ட்ரை சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்துள்ளார். மற்றொருவர் கையில் கோனி பையுடன் நடந்து வந்து வீட்டின் முன்பு வெளியே யாரும் இல்லாததை பார்த்ததும் உள்ளே புகுந்து இரும்பு கேட்டை திருடி சென்றுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. திருட வந்த அந்த நபர் சிகிரெட் பிடித்தபடி வீட்டின் முன்பு நின்று சாவகாசமாக சிகிரெட் பிடித்து விட்டு அங்கு பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளதையும் பார்த்து விட்டு பின்னர் தைரியமாக உள்ளே சென்று இரும்பு கேட்டை திருடி சென்றுள்ளார்.  இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளரான வழக்கறிஞர் செல்வராஜன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது அலட்சியமாக பேசி புகாரை ஏற்க மறுத்ததாக கூறினார்.

சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போதே தைரியமாக வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடும் சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிசிடிவி காட்சியுடன் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் எழுப்புகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here