மயிலாடுதுறை, மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அலுவலக கட்டிடம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் மூன்று வகுப்பறைகள் கொண்ட பழமையான பள்ளி கட்டிடம் உள்ளது.

மேலும் அதன் அருகே ஒரு ஆய்வக கட்டிடமும் உள்ளது. மிகவும் உள்பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி திட்டுப் பகுதியான இடத்தில் உள்ள இக் கட்டிடத்தில் வகுப்புகள் இயங்கி வருகிறது.

இங்கு வருடம் தோறும் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% வெற்றி பெற்று இப்பள்ளி சாதனை படைத்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து 100% மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இந்த வருடமும் இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது. வருடந் தோறும் பருவமழையின் போது கொள்ளிடம் ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இப்பள்ளியை  தண்ணீர் சூழ்ந்து கொண்டு விடுவதால் வகுப்புகளுக்கு வருடம் தோறும் பருவமழையின் போது விடுமுறை விடப்பட்டு வருகிறது.

பின்னர் பள்ளி கட்டிடத்தை சூழ்ந்திருந்த மழைநீர் வடிந்த பிறகே வகுப்புகள் துவங்கி நடைபெறுவது இங்கு வழக்கமாக இருந்து வருகிறது. இருந்தும் இப்பள்ளி பொதுத்தேர்வில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் இப்பள்ளி சாதனை படைத்து வருகிறது.

ஆனால் அது மட்டும் போதாது தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. வகுப்பறை கட்டிட வசதி இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்து வருவதால் மாணவர்கள் அங்கு திறந்தவெளியில் பள்ளிக்கருகில் அமர்ந்து பாடம் கற்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்து வருகின்றனர். எனவே தனித்தீவு போன்று இருந்து வரும் முதலை மேடு திட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கவும்,கூடுதலாக புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here