பாபநாசம், ஏப். 18 –

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகேவுள்ள கணபதி அக்ரஹாரத்தில்,  நூற்றக்கும் மேற்றபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாபநாசம் அருகேவுள்ள கணபதி அக்ரஹாரம் கடை தெருவில் இன்று ஆடுதுறை, விசித்திரராஜபுரம் மற்றும் கலைஞர்நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மூன்று சமூகத்தினற்கு உடனடியாக சுற்றுச்சுவருடன் கூடிய சுடுகாடு கட்டித் தரவும் மேலும் அதற்கான சாலை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், மற்றும் சுடுகாடு கட்டிடம் கட்டுவதற்கான இடம் நீக்கப்பட்டதை தொடர்ந்து அதனை உள்ளிக்கடை கிராம கணக்கில் பதிவு செய்யாமலும் சுடுகாடு கட்டிடம் கேட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதனை கண்டு கொள்ளாது காலம் கடத்தி வரும் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உள்ளிக்கடை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளிட்ட திரளான அப்பகுதி மக்களும் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து, கபிஸ்தலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்றநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து, கைது செய்ய முயன்ற போது, அவர்கள் இருவருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியினரிடையே போலீஸார் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து வெகு நேரமாக நடைப்பெற்ற அப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தால், கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here