காஞ்சிபுரம், மார்ச். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் தொண்டர்கள் இணைப்பு விழா நடைப்பெற்றது. அதில் 20 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் தங்களை பாஜக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முன்னணி அரசியல் கட்சியினரும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களிக்கான இணைத்தல் விழா மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பல்வேறு விதமான தேர்தல் பணிகளை மேற்கொண்டு தங்களது கட்சியினை பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணையும் இணைப்பு விழா தாசரதி தலைமையில் அசோக், அருண்குமார், ஆனந்தன், செல்வம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினரும், அது போல் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி வந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர்  தங்களை பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு, பாஜகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் 30வது வார்டு மடம் தெரு பகுதியில் கார்த்திக் தலைமையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், பாஜகவின் வளர்ச்சிக்கும், தொடர்ந்து மக்கள் நல பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காக தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்வதாகவும் பாஜகவில் இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் வாசன், ருத்ரகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜகுமாரி, ஜம்போடை சங்கர், எல்லம்மாள், பிரபுராஜ், மாவட்ட செயலாளர்கள் செந்தில், தனபால், டிஜிட்டல் ஸ்ரீதர், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் ப.குமார், மண்டல தலைவர்கள் (மேற்கு) ஜீவானந்தம், (கிழக்கு) ஞானசூரியன், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஆக்டர் குமார், அரசு தொடர்பு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வெங்கடேசன், மாநில செயலாளர் கூட்டுறவு பிரிவு லட்சுமிநாராயணன் மற்றும் பாஜக மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here