மீஞ்சூர், மே. 12 –

மீஞ்சூர் பகுதியில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை வேலைப்பட்டின் நிலைக்குறிந்து இன்று அமைச்சர்  எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வரும் நிலையில் அன்றையத்தினம் அவரது திருவுருவச்சிலை சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நிறுவப்.படுவதற்காக கலைஞரின் வெண்கல சிலை ரூபாய் 1 கோடியை 56 லட்ச ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை சார்பில் மீஞ்சூர் அடுத்துள்ள புதுப்பேடு கிராமத்தில் உள்ள சிற்பி தீனதயாளன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அச்சிலையின் வேலைப்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று புதுப்பேடு கிராமத்திற்கு வருகை புரிந்தார். அவரை சிற்பி தீனதயாளன்  வரவேற்றார். தொடர்ந்து  உருவாக்கப்பட்டிருக்கும் கலைஞரின் சிலையை அமைச்சர் பார்வையிட்டு சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தும். வேலைப்பாடுகள் முடியும் நாட்கள் குறித்தும் கேட்டறிந்துச் சென்றார்.

மேலும் இதுக்குறித்து அங்கிருப்பவர்கள் தெரிவிக்கையில் ஓமந்தூரார் தோட்டத்தில் நிறுவப்பட் உள்ள கலைஞர் கருணாநிதியின் வெண்கல முழு உருவ சிலை 16 அடி உயரம் கொண்டது எனவும், அதற்கான பணி கடந்த நான்கு மாதகாலமாக முழுநேரப் பணியாக 10 பேருடன் சேர்ந்து முழுவீச்சில் வேலை நடந்து வருகிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும் கலைஞர் திருவுருவச்சிலைக்கான வேலைப்பட்டினை இச்சிற்பி ஏற்கனவே காந்தி. காமராஜர் .ஆதித்தனார். அண்ணா .முரசொலிமாறன். உள்ளிட்ட சிறப்பு மிக்க பல்வேறு தலைவர்களின் சிலைகள் உருவாக்கிவுள்ளார். என்பது பெருமைக்குரிய விஷயமும் குறிப்பிட தகுந்ததும் ஆகும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here