இராமநாதபுரம்; நவ.12-
அழகப்பா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடந்த செஸ் போட்டியில் பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கலந்துக்கொண்டன. இப்போட்டியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி நல அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக இரண்டாம் ஆண்டு வணிகவியல்( சி.ஏ ) வில் பயிலும் மாணவி டி.ஏஞ்சலின் பிரசிட்டா கலந்துக்கொண்டு முதல் இடத்தைப் பிடித்து பரிசை வென்றார்.
இப்போட்டியில் பங்கு பெற்ற காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஜெனிபர் இரண்டாம் இடத்தை பிடித்து பரிசைப்பெற்றார்,மேலும் காரைக்குடி உமையாள் ராமநாதன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவி லெட்சுமி மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றிப் பெற்றனர்.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ஏ.நாசர் அலி மற்றும் முதல்வர் எஸ்.நிர்மலா குமாரி கல்வியியல் கல்லூரி முதல்வர் சி.முத்து மேலும் அலுவலக நிர்வாகிகள் பி.நாகராஜன், எஸ்.ராஜேந்திரன், மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் முதல் இடத்தை பிடித்து வெற்றிப் பெற்ற மாணவி ஏஞ்சலின் பிரசிட்டாவிற்கு தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.