பொன்னேரி, ஜூலை. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் மன்றத்தின் கூட்டரங்கில் நகராட்சித் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதிநன்று நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் வார்டுகளில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் அவ்வார்டுகளில் உள்ள சாலைகள் பாதிப்பகள் குறித்தும் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் சீரமைப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை செய்து தரும்படி கோரிக்கைகளை எழுப்பினார்கள்.
தொடர்ந்து பேசிய வார்டு உறிப்பினர்கள் பல்வேறு பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்டு தற்போது போது வரை அவைகள் மூடப்படாததால், சாலைகளில் குண்டும் குழியுமாக இருந்து வருவதாக அப்போது தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் உடனடியாக உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து கோரிக்கைகளுக்கும் பதலளித்து, உடனடியாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் உடனடியாக ரப்பீஸ் கொண்டு சீரமைக்கப்படும் என தெரிவித்து அது தொடர்பாக அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உமாபதி, பரிதா ,கவிதா, பத்மா, சாமுண்டீஸ்வரி, நல்லசிவம் ,மோகனா, உள்ளிட்ட 21 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.