மீஞ்சூர், மார்ச். 20 –
திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த ஐந்து ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமையேற்று வழி நடத்த. மாவட்ட பிரதிநிதி தமிழரசன். பழவேற்காடு மொழிப்போர் தியாகி கன்னிமுத்து .இளைஞர் அணி அமைப்பாளர் தமிழரசன். உள்ளிட்டவர்கள் இவ்விழாவினை முன்னின்று செயல்படுத்தினார்கள்.
மேலும், வெள்ளிவாயில் சாவடி பகுதியில் துவங்கிய பிறந்தநாள் விழா அதனைத் தொடர்ந்து கொண்டக்கரை, நந்தியம்பாக்கம், நெய்தவாயல், திருவெள்ளைவாயல் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் நடைபெற்றது.
முன்னதாக திமுக புதியக் கொடியினை கம்பத்தில் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஏழை தாய்மார்களுக்கு புடவைகளும். கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களுக்கு வேட்டிகளும் சால்வைகளும் வழங்கி அவர்களை பெருமைப் படுத்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் அனைவருக்கும் அருசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின் போது, வெள்ளிவாயல் சாவடி . மோகனசுந்தர். சேகர் .திருநாவுக்கரசு பிரகாஷ். கொண்டகரை வெஸ்லி மனோகர் தினகரன். கனகசபாபதி வெங்கடேசலு. குசேலர் விஜயன். புகழேந்தி. முனி நாதன். கலைவாணன். நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன். கலாநிதி நெய்தவாயல் வீரன். திருவெள்ளை வாயல் ஊராட்சி மன்ற தலைவர் கோபி உள்ளிட்ட திரளான மாவட்டம், .ஒன்றியம், .நகர, கிளை, பல்வேறு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் திரளானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.