திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு

கும்பகோணம், செப் . 24 –

திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர கால ஊர்திகள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் செல்லமுடியாத நிலை.

 எனவே இப்பகுதியில் லெவல் கிராஸ் அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில்200க்கும் மேற்பட்டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஸ் அகர்வால் செல்லும் சிறப்பு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சிறப்பு ரயிலில் இருந்து கீழே இறங்கி எம்பி, மற்றும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ்அகர்வால் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இன்னும் இரு வாரங்களில் ரயில்வே தொழில் நுட்ப குழுவை காங்கேயம்பேட்டை கிராமத்திற்கு அனுப்பி லெவல் கிராஸ் அமைக்க முடியுமா ? அல்லது சுரங்கப் பாதை அமைக்க முடியுமா?  என்பது குறித்து தொழில்நுட்ப குழு கொடுக்கும் அறிக்கையை பொறுத்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கத்திடம் உறுதி அளித்தார். மயிலாடுதுறை எம்பி தலைமையில் நடைபெற்ற திடீர் மறியலால் காங்கேயம்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here