செய்தி சேகரிப்பு இரமேஷ்

கும்பகோணம், செப் . 3 –

 

கும்பகோணம் அருகே உள்ளது பரவனூர் கிராமம் இவ்வூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ் வூருக்கு இறந்தந்தவர்களின் உடலை எரிக்க மயனம் என்பதில்லாமால் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு காலக் கட்டங்களில் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இந்த ஊர் மக்களின் குமுறலாகும். அதனால் வேதனை கொண்டுள்ள அவ்வூர் மக்கள் இனியும் அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கையாண்டால், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பல கட்ட போராட்டங்களை நடத்துவதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்கள். இனியும் தாமதம் கொள்ளாமல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரைவில் தங்களது கிராமத்திற்கு மயானம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்

திருப்பனந்தாள் அருகே வீராக்கன் ஊராட்சிக்கு உட்பட்ட பரவனூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த  கிராமத்தில்  இது நாள் வரை இவர்களுக்கான மயானம் இல்லாததால், கொள்ளிடம் ஆற்றின்  படுகை பகுதியிலேயே ஆங்காங்கே சடலங்களை எரித்தும்,  புதைத்தும் வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று பரவனூர் கிராமத்தை சேர்ந்த சின்னையன் என்பவரின் மனைவி சரோஜா உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் அவரின் உடலை எரிப்பதற்கு கொள்ளிடம் ஆற்று படுகைக்கு எடுத்து சென்ற போது திடீரென மழை பெய்ததாதால்  கொட்டும் மழையில் பிளாஸ்டிக் தார்பாயை பிடித்தவாறு உடலை நனையாமல் எரித்தனர். இந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானம் மற்றும் மயான பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தமிழக அரசு விரைவில் இப்பகுதி மக்களுக்கு மயான பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் இனியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியம் செய்தால், ஊர் மக்களை ஒன்று திரட்டி பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும்  பரவனூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here