கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளைப்பிள்ளையார் கோயில் என போற்றப்படும் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து, குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 2 –
கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளைப்பிள்ளையார் கோயில் என போற்றப்படும் இத் தலத்தில் காவிரி நதியானது ஈசனை வலம் சுற்றி வழிப்பட்டு சென்றமையால் திருவலஞ்சுழி என பெயர் பெற்றது. தேவர்களும், அசுரர்களும் இணைந்து பார்க்கடலில் அமுதம் கடையும் போது, அமுது நுரையினால் சிருஷ்டிக்கப்பட்ட அமிர்த்த மயமான சுவேத விநாயகரை வழிப்பட்டு அமுதம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தனர் என்பது இத்தல வரலாறாகும். இவ் விநாயகரை தேவேந்திரன் தனது ஆத்மார்த்த பூஜை மூர்த்தியாக வழிப்பட்டார் இத்தகைய புகழ் பெற்ற இத்தலத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா பத்து தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்
அது போல இவ்வாண்டும் இவ்விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது, முன்னதாக, கொடிமரத்திற்கு மாபொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், சந்தனம் முதலிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க முஷிக வாகனம் பொறித்த திருக்கொடி ஏற்றப்பட்டது கொடியேற்றத் தினையொட்டி ஸ்ரீ விநாயகப் பெருமான் தனது இரு மனைவியரான வாணி மற்றும் கமலாம்பிகையுடன் கொடிமரம் அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந் நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் விநாயகர் சதுர்த்தி விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 08ம் தேதி புதன் கிழமை விநாயகர் பெருமான் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று (அரசின் விதிமுறைகளின்படி வெள்ளி சனி ஞாயிறு பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லாத நிலையில்) காலை தேவேந்திரன் பூஜையும், அதனை தொடர்ந்து திருக்கோயில் பிரகாரத்திலேயே தேரோட்டமும் நடைபெறுகிறது, பிறகு 11ம் தேதி சனிக்கிழமை (பக்தர்கள் அனுமதியின்றி) கோயில் வளாகத்திலேயே தீர்த்தவாரி நடைபெற்று அன்று மாலை துவஜா அவரோஹணமும் முடிந்து, இவ்வாண்டிற்காண விநாயகர் சதுர்த்தி பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.