எருமை மாட்டிடம் மனுக்கொடுத்து நூதனமுறையில் 8 வது நாளாக  திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் கரும்பு விவசாயிகள் ..

திருமண்டங்குடி, டிச. 07 –

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து  கரும்பு விவசாயிகள் 8 வது நாளாக நூதன முறையில் எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாகவே சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் கோரிக்கை முழக்கங்களை கரும்பு விவசாயிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

மேலும் எட்டு நாட்களுக்கு மேல் தொடரும் கரும்பு விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டம். போராட்டம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைச்சார்ந்த நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு என அனைவரின் கவனத்திற்கும் தங்கள் நீண்ட நாள் பிரச்சினைகளை எடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு விதமான நூதனப் போராட்டங்களை நடத்தி வரும் இக்காத்திருப்பு போராட்ட கரும்பு விவசாயிகள்,  நேற்று எருமை மாட்டிடம் மனுக் கொடுத்து தங்கள் பிரச்சினை முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் அப்போராட்டத்தின் வழியாக செல்பவர்கள் இந்த வினோதமான போராட்டத்தை கண்டு எள்ளி நகையாடுவது போலும் தங்கள் வேதனைகளை தெரிவிப்பது போலும் எருமை மாட்டிடம் மனு அளிப்பதென்றால் அதன் பொருள் என்ன எனவும் மேலும் இதற்கான குறியீடு யாரைக் குறிக்கிறது என  ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு கடந்து செல்கின்றனர் அரசும் இதில் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் இப்போராட்டம் மாநில செயலாளர் தங்க காசிநாதன், நாக முருகேசன் ஆகியோர் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நல்லதம்பி அமிர்தலிங்கம் எஸ் கே செந்தில் மோகன்தாஸ் குணசேகர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு எருமை மாட்டிடம் மனு கொடுத்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அய்யாகண்ணு ஒரு போராட்டத்தில் பங்கேற்கிறார் என்றால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here