கும்பகோணம், மார்ச். 21 –

கும்பகோணம் 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம்  சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ முக்கிய நிகழ்ச்சியாக, இன்றிரவு பெருமாள் மற்றும் தாயார் ஏகசிம்மாசனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள பிரகார உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்;ந்தனர்.

கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த வைணவத்திருத்தலம் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் ஸ்ரீ சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் அருள் பாலிக்கிறார் தாயார் கோமளவள்ளி, ஹேமரிஷி தவம் செய்த தலம் அவர் பெயரால் விளங்கும் ஹேம புஷ்கரணியில் தோன்றிய மகாலட்சுமியை (கோமளவள்ளி) பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக ரதத்துடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக வரலாறு .

பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், இங்கு கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் தனியாக இல்லை பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்ததாக 3வது தலமாக ஸ்ரீ சாரங்கபாணித் திருக்கோயில் விளங்குகிறது

இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் கோமளவள்ளி தாயாருக்காண பங்குனி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் 15 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்வுற்சவம் கடந்த 10 ஆம் தேதி  தாயார்  கொடிமரத்தில்  கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, ஏற்றப்பட்டு விழா தொடங்கி நாள்தோறும் தாயார் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெற்று‌ வருகிறது

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்றிரவு, உற்சவர் சாரங்கபாணி சுவாமி மற்றும் கோமளவ்லி தாயாருடன் ஏகசிம்மாசனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள பிரகார உலா சிறப்பாக நடைபெற்றது ! இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்  தொடர்ந்து 24ம் தேதி வியாழக்கிழமை  பெருமாள் தாயார் ஏகசிம்மாசன சேவை, விடையாற்றியுடன்  தாயார் பங்குனி பிரமேற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here