கும்பகோணம், ஜன. 17

கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை தீட்டி அசத்தியிருந்தனர், மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களும் இப்போட்டியில் இடம் பெற்று இருந்தன என்பது குறிப்பிடதக்கது. பள்ளி குழந்தைகளுக்காக நடைபெற்ற ஓவியப்போட்டியிலும், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.

கும்பகோணம் பாணாதுறை தெற்கு வீதியில், தாய் தொண்டு நிறுவனம் சார்பில், மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை போட்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி இருந்தனர், பலர் சமூக அக்கறையுடன் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோலங்களையும் போட்டு அசத்தியிருந்தனர் மேலும் எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கும் தனியாக ஓவியப்போட்டியும் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்று பலவிதமான அழகிய ஓவியங்கள் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இக்கோலங்களையும், ஓவியங்களையும், ஐந்து பேர்  கொண்ட நடுவர் குழு மிக சிறந்த 3 கோலங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கும், ஓவியம் தீட்டிய மாணவர்களுக்கும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இராமமூர்த்தி ஆதிலட்சுமி தம்பதியினர் பரிசளித்து பாராட்டினர் மேலும் இப்போட்டியில் பங்கேற்று கோலம் போட்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here