கும்பகோணம், மே. 02 –
கும்பகோணத்தில் சௌராஷ்டிரா புதுத் தெருவில் உள்ள மாயா சக்தி திருக்கோவிலின் 80ம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலபிஷேக திருவிழா நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து நேர்திக்கடன் செலுத்தி வந்தனர்.
கும்பகோணத்தில் சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ மாயா சக்தி அம்மனுக்கு 80ஆம் ஆண்டு பாலாபிஷேக திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் நடைப்பெறாமல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த 29ம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நேற்று கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான இன்று காவிரி ஆற்றிலிருந்து சக்திவேல் சக்தி கரகம் அக்னிசட்டி பால்குடம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மாயாசக்தி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று மதியம் நடந்த சிறப்பு வஸந்த பாலாபிஷேகத்தில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மறுநாள் புதன்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி புறப்பாடும் அதனைத் தொடர்ந்து படுகளம் காட்சியுடன் திருவீதியுலா நடைபெறுகிறது.
தொடர்ந்து வருகிற 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அம்பாள் புறப்பாடும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு கும்ப பூஜை எனும் அன்னப்பாவாடை நிகழ்ச்சியுடன் இவ்வாண்டிற்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தெருவாசிகள் சௌராஷ்டிரா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.