கும்பகோணம், ஏப். 03 –

கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான ஆனந்த நிதி அம்பிகை சமேத ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் தூமகேது முனிவரால், நிறுவி வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்டது எனவும் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இச்சிறப்பு மிக்க இத்திருத்தலத்தில் ஸண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கமாகும்.

மேலும் அதுபோல இவ்வாண்டும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 26ம் தேதி அத்திருத்தலத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. மேலும் அத்திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாளான இன்று ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி சட்டத்திலான திருத்தேரில் எழுந்தருள அச்சட்டத்தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும், இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சட்டத்தேரின் வடம் பிடித்து இழந்து வந்தனர்.

மேலும் இத்திருவிழாவின் தொடர்ச்சியாக 4  ஆம் தேதியான நாளை செவ்வாய்க்கிழமை மகாமக திருக்குளத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here