கும்பகோணம், பிப். 15 –

கும்பகோணத்தில் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  இன்று நடைபெற்றது. இதில் அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கலம்பிகை தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 17ஆம் தேதி மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here