கும்பகோணம், டிச. 16 –

கும்பகோணத்தில் மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு இங்கு பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும்  சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களுக்கும்   இணைந்து நடத்தும், ஏகதின ஆண்டு உற்சவம் விழா இதனைத் தொடர்ந்து இன்று இருகாளிகளின் திருநடனத்துடன் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பால் குடம் ஏந்தி வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி தங்களது பிராத்தனைகளை நிறைவேற்றினார்கள்.

மார்கழி மாத துவக்கத்தையொட்டி, கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற பெசண்ட் சாலையில் உள்ள உச்சினிமா காளியம்மன், எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஈசான்ய எல்லையம்மன், காசிராமன் தெருவில் உள்ள சுந்தரமா காளியம்மன் ஆகிய மூன்று அம்மன் கோயில்களிலும் இணைந்து ஏகதின ஆண்டு உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது

இவ்வுற்சவத்தினை முன்னிட்டு, காவிரியாற்றின் பகவத் படித்துறையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக,   நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சுந்தரமகா காளியம்மன், மற்றும் உச்சினிமா காளியம்மன் ஆகியவற்றின் திருநடனத்துடன், வேல்கள் சுமந்தும், ஏராளமான பெண்கள் பால்குடங்கள் ஏந்தியும் திருக்கோயில்களுக்கு வந்து பாலாபிஷேகம் செய்து தங்களது பிராத்தனைகளை நிறைவு செய்து சுவாமிகளை தரிசனம் செய்தனர் இவ்வுற்சவத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here