கும்பகோணம், டிச. 17 –

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த தாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார். குழந்தையின் இறப்புக் குறித்து நியாயம் வேண்டியும், அலட்சியமாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் அவர்களது உறவினர்கள்  கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் ரமா ஆகிய தம்பதியினருக்கு மூன்று நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது, ஆனால் இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்ததும், மூன்று நாட்களாக குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தை எந்த முன்னேற்றமும் அடையாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தது, குழந்தையின் நிலை குறித்து மருத்துவர்கள் பெற்றோர்களிடம் எந்த ஒரு தகவலும் கூறாமல் தங்களை அலைக்கழித்த தாகவும், திடீரென்று 3வது நாளான நேற்று முதலில் குழந்தை பிழைப்பது கடினம் என்றும், உயிர் பிழைக்கும் என உறுதியாக கூற முடியாது என்றும் அதிர்ச்சி தகவலை அளித்ததாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் சில மணி நேரத்திற்கு பின்பு குழந்தை இறந்து விட்டதாகவும் தகவல் தந்துள்ளனர்,

இந்நிலையில், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள 24 மணி நேர குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் முழுநேரமும் மருத்துவர்கள் இருப்பது இல்லை என்றும், மருத்துவர்கள் இல்லாத நேரங்களில், செவிலியர்கள் தான் மருத்துவர்கள் பணிகளை பார்ப்பதாகவும், அங்கு இருக்கும் தூய்மை பணியாளர்கள் தான்  செவிலியர்கள் பணியை பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் எழுப்புகின்றனர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியப் போக்கே குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தது என்றும்  கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி முன்பு, குழந்தையின் தந்தை சுகுமாரன் குழந்தையை உடனடியாக காப்பாற்றிட வேண்டி முறையிட்டதை தொடர்ந்து,   அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கும்பகோணம் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்திட உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததால், குழந்தையின் பெற்றோருடன், அவரது உறவினர்கள் பலரும் திரண்டு, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர், இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், 24 மணி நேரமும் வார்டில் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களை செவிலியர்கள் வேலையை செய்யக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதுடன், தற்போது பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றம் இருப்பின் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here