கும்பகோணம், ஜன. 11 –

கும்பகோணத்தில் இன்று இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250  அச்சகர்கர் மற்றும் பணியாளர்களு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுயிருந்தது.

அரசின் வழிகாட்டுதலின் படி இன்று இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள 26 திருக்கோயிலகளில் பணியாற்றும் 250 பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும் மேலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்கிடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதன் பகுதியாக இன்று கும்பகோணம் கும்பேஸ்வரன் திருக்கோவில் உள்ளிட்ட 46 கோயில்களில் உள்ள 250 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் புத்தாடை மற்றும் சீருடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் சு.ப தமிழழகன் மண்டல தலைவர் ஆசைத்தம்பி அவைத் தலைவர் வாசுதேவன் மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன் செல்வராஜ் இணை ஆணையர் சாந்தா உதவி ஆணையர் உமாதேவி செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here