ராமநாதபுரம், மே 19-

ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ண சாமி கோயில் பூசாரி அருள்வாக்கு சிவா பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு கோயில் பூசாரி சிவா அருள்வாக்கு வழங்கி வருகிறார். இவரிடம் குடும்ப பிரச்னை, தீராத நோய், வேலையில் பிரச்னை, தொழில் முடக்கம், தொழில் இடையூறு, செய்வினை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் அருள்வாக்கு மூலம் தீர்வு கண்டு செல்கின்றனர். இவரின் அருள்வாக்கை கேட்பதற்காக சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி என பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த 18ம் தேதி பவுர்ணமி தினத்தில் கோயிலில் பூசாரி சிவா கருப்பண்ணசாமி இறங்கி பக்தர்களை ஒவ்வொருத்தராக அவரே அழைத்து, பக்தர்கள் என்ன பிரச்னைக்காக வந்துள்ளனர் என்பதையும் அருள்வாக்கின் மூலம் பக்தர்களிடம் கூறினார். பக்தர்கள் தாங்கள் சொல்லாமலேயே பூசாரி சரியாக சொன்னதை கண்டு ஆச்சரியப்பட்டு கருப்பண்ணசாமியை வணங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை 3 மணி வரை அருள்வாக்கு கூறப்பட்டது. வந்திருந்த பக்தர்களுக்கு எம்பிகே அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கீழக்கரை ராமஜெயம், லட்சுமணன் உள்ளிட்டோர் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here