திருவாரூர், ஏப். 24 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா காப்பணாமங்கலம் உப்புகடை தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றது.

கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் துவங்கிய இச் சித்திரை திருவிழா, இன்று பாடைக் காவடி, அலகு காவடி மற்றும் பால் குடங்கள் ஏந்தி பெருந்திருவிழா  நடைபெற்றது.

பக்தர்கள் கண் அடக்கம், கை கால் போன்ற உருவங்களை  ஆகாய மாரியம்மனுக்கு காணிக்கை அளித்து   நேர்த்தி கடன் செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாலை அழகு காவடிகள் மின் அலங்கார காவடிகள் நடனத்துடன் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய ஆடு கோழிகள் ஏலம் விடப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் உள்ளூர் போலீசார் குறிப்பிட்ட அளவில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here