காஞ்சிபுரம், மே. 02 –
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்த பணமும் கையூட்டு வாங்கக் கூடாது என்றும் மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தாலூகா சிறு காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது அவர் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 6,926 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக நியாயவிலை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொருட்களின் தரம் குறித்தும் அளவு குறித்தும் சோதனை மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும் நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை வழங்கிட வேண்டுமென உத்தரவையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கில் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்பட்டு வரும் பொருட்களை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உணவுத் துறை அமைச்சர்
தமிழகத்தில் 6,926 நியாயவிலைக் கடைகள் வாடகைக்கு இயங்கி வருவதாகவும், அதற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றும், திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் 11 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கி சாதனை படைத்துள்ளது என்றும், மேலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்த பணமும் கையூட்டு வாங்கக் கூடாது என்பதற்காக கூலி உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் விவசாயிகளிடம் கையூட்டு பெறப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனவும் இதுவரை 27 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, இருவர் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர், இருவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் உள்ளனர் என்றும், மேலும் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நியாயவிலை கடைகளில் தரமாக அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு அரசு உறுதியாக உள்ளது. ஆகையால் குடோனில் இருந்து நியாய விலை கடைக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் அரிசி நியாய விலை கடைக்கு கொண்டு வருவதற்கு முன்பு குடோனில் அதன் தரத்தை சரி பார்த்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் 10 நியாய விலை கடை விற்பனையாளர்கள் தரமற்ற அரிசி வழங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு பின் விசாரணைக்குப் பின் அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் 4,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும் என தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.