காஞ்சிபுரம், ஜூலை. 03 –

காஞ்சிபுரம் அருகேவுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் – துரியோதனன் படுகளம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில்  அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று பீமன் – துரியோதனன்  படுகள உற்சவம் நடைபெற்றது.

உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக  துரியோதனன் 100 அடி சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் – துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

பீமன் – துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், தாமல் மற்றும்  காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து,  திரொளபதிஅம்மனை வழிபட்டுச் சென்றனர்.

கடந்த 13-06-2022 தேதியன்று  துவங்கிய திருவிழா மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகின்றது. 21 ஆம் நாளான இன்று காலை படுகளம் மற்றும் இரவு தீமிதி திருவிழா நடைபெறுகின்றது. மேலும் இத்திருவிழா எதிர் வரும் 23 ஆம் தேதி நிறைவுபெறுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here