பூவிருந்தவல்லி, ஏப். 26 –

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட நடுகுத்தகை ஊராட்சியில் உள்ள அரசு நிலைப் பள்ளியில் இன்று கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவதிட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா நடைப்பெற்றது. அதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இவ்விழாவினை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாமின் நோக்கம் நோய் வருவதற்கு முன்பாகவே அதற்கான பரிசோதனையை மேற் கொண்டு தேவைப்படின் முறையான சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் அந்நோய் வருவதற்கு முன்பாகவே நம்மை தற்காத்துக்கொள்ளக் கூடிய உயரிய நோக்கம் கொண்ட தமிழாக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் என்ற திட்டமாகும். இத்திட்டம் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசால் முறையாக செயல்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தினை முறையாக தமிழகம் முழுவதும் செயல்படுத்த ஆணைப்பிறப்பித்ததின் விளைவாக தமிழகம் முழுவதும் மருத்துவ பயனாளிகள் இம்முகாம்களின் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

மேலும் இத்திட்டம் நாடு முழுவதும் ஏப் 16 முதல் 30 வரை வட்டார அளவிலான சுகாதார திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வட்டாரத்திற்கு ஒரு முகாம் வீதம் நடைப்பெற்று வருகிறது.

இதில் கண்டறியப்படும் மருத்துவ பயானாளிகளுக்கு சாதரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் அரசு ஆரம்ப நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவற்றிற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்க செய்தல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், பரிந்துரை மற்றும் தொடர் நடவடிக்கை, சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக மக்களின் நலவாழ்வை மேம்படுத்துதல் ஆகியவை இந்து வருமுன் காப்போம் திட்டத்தின் நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.

தமிழகமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்த்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் மேற்கொண்ட மருத்துவமனைகளுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் நாய் சேய் நலம், சிறப்பு பொது மருத்துவமான இருதய நோய், சர்க்கரை நோ

ஃ, உயர் இரத்த அழுத்தம், அறுவைச்சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, மனநல மருத்துவம், இந்திய முறை மருத்துவம், ஐ.சி.டி.சி. சேவைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், கோவிட்-19 பரிசோதனை மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஆகியவை இம் முகாம்களில் உள்ள சிறப்பு மருத்துவப் பிரிவுகாளகும்.

இத்திட்ட முகாமில் இரத்த முழு பரிசோதனை, இரத்த சோகை அளவு பரிசோதனை, இரத்த உறைதலை கண்டறிதல், இ.எஸ்.ஆர்., இரத்தவகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவை கண்டறிதல், இரத்த கொழுப்பளவு, யூரியா கிரியாட்டினின், இரத்த தடவல், டைபாய்டு பால்வி நோய், எச்.ஐ.வி., மஞ்சள் காமலை-பி, சிறுநீர் முழுபரிசோதனை, கர்ப்ப உறுதி பரிசோதனை, மலப்பரிசோதனை, சளி பரிசோதனை, கொரோனா பரிசோதனை, மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை வாய் புற்று நோய் பரிசோதனை, இருதய சுருள் வரைப்படம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை போன்ற ஆய்வக பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

முகாமிற்கு வரும் பயனாளிகளுக்கு உடல் எடை, உயரம் மற்றும் இரத்த அழுத்தம் பார்க்கபடுகிறது. செங்கு பன்றிக்காய்ச்சல் கொரோனா நோய் தடுப்பு அறிவுரை சம்பந்தமாக விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இம்முகாம் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைப்பெறுகிறது. மேலும், ஒவ்வொரு மருத்துவ முகாம்களிலும் பொது மக்களுக்கு வழங்குவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அட்டைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஏறக்கறைய 14 முகாம்கள் நடைப்பெற்றிருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இதுவரை நடைப்பெற்ற முகாம்களின் எண்ணிக்கை 1248 ஆகும் இதன் மூலம் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்களின் வாயிலாக 8,64,964 ஏழை எளிய மருத்தவ பயனாளிகள் பயனடைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு பொருளாதார இழப்பின்றி நோய் பாதுகாப்பு அளித்திடும் வகையில் இருக்கிறது என்பது திண்ணம்.

இந்நிகழ்வில் திருவள்ளூர் நாடளுமன்ற உறுப்பினர் முனைவர் கே.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேசிங்கு, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பூவிருந்தவல்லி மருத்துவர் செந்தில்குமார், திருவள்ளூர் மருத்துவர் கு.ரா.ஜவஹர்லால், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here