பொன்னேரி, ஜூன். 22

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பு ஆண்டுக்கான வருவாய் தீர்ப்பாயத்தின் பசலி 1432 மீஞ்சூர் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீஞ்சூர் குறு வட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமை வகிக்க, மீஞ்சூர் குறுவட்டத்திற்கான வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், கிராம நிர்வாக அலுவலர்கள் மீஞ்சூர் சாந்தி, அத்திப்பட்டு ருத்ரன், தவசி, அலுவலர்கள், எத்திராஜ், புவனா, பவித்ரா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஜமாபந்தி நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து இதில்  ஊராட்சி மன்ற தலைவர்கள் எம்.டி.ஜி.வடிவேல், கலாவதி நாகராஜன், உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

இன்று நடைப்பெற்ற வருவாய் தீர்வாயத்தின் பதினோராம் நாளான நிகழ்ச்சியில் நாலூர்,வன்னிப்பாக்கம் ,மீஞ்சூர், நந்தியம்பாக்கம் அரியன்வாயல் ,வெள்ளம்பாக்கம், கொள்ளட்டி, கல்பாக்கம்,எண்ணூர், அத்திப்பட்டு, உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்ப்பாயத்தின் மூலம் பொது மக்களின் பல்வேறு பிரச்சனைகளான பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விண்ணப்பம், ஓய்வூதியம், ஜாதி சான்று, வருமானச் சான்று, நில அளவீடு செய்தல் உள்ளிட்ட தேவைகளுகான பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here