திருவாரூர், ஜூன். 26 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் “பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்” என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பணப் பயிரான பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். தற்பொழுது பருத்தி பஞ்சு எடுத்து அதை அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலமாக வியாபாரிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு அறுபது ரூபாய் அறிவித்திருந்த போதிலும், குறைந்தபட்சமாக 48 ரூபாய் முதல் 58 ரூபாய் வரையிலும் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி தொடர் போராட்டங்களில்  ஈடுபட்டனர். இதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பருத்திக்கு குறைந்தபட்சம் 80 ரூபாயாவது வழங்கினால் தான் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க இயலும் என விவசாயிகள் முறையிட்டனர்.

மேலும் அக் கூட்டத்தில் பேசிய முன்னோடி விவசாயி அழகர்ராஜ்

விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி செய்வதால் தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவும், மேலும் பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் அதை நடத்தி பிழைப்பை பா,ஃத்துக் கொள்கிறோம் என ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலாய் தனது வேதனையை அப்போது தெரிவித்தார்.

மற்றொரு விவசாயியான சேதுராமன் கூறுகையில் …

நெல்லை அரசு கொள்முதல் செய்வது போன்று பருத்தியை கொள்முதல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சில நெற்பயிர்களை அரசு பயிரிட வேண்டாம் என அறிவித்த நிலையில், பருத்தியையும் விளைவிக்க வேண்டாம் என அரசு அறிவித்தால் நாங்கள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என அப்போது வேதனையுடன் தெரிவித்தார்..

இதுக் குறித்து மாவட்ட ஆட்சியர் பருத்தி கொள்முதல் செய்யும் தரகர்களிடம் சற்று கூடுதலாக பருத்தி கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here