இராசிபுரம், மார்ச். 23 –

இராசிபுரம் வட்டாரம் ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி ராசிபுரத்தில் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, இராசிபுரம் வட்டாரம் ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், வட்டார அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் கண்காட்சி ராசிபுரம் சரவண மஹாலில் நடந்தது.  இந்நிகழ்ச்சியை ராசிபுரம் ஒன்றியத் தலைவர் K.P.ஜெகநாதன் கண்காட்சியைத் துவக்கிவைத்தார்.  மாவட்ட திட்ட அலுவலர் பரிமளாதேவி, இராசிபுரம் வட்டாரம் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சவிதா ஆகியோர் தலைமை வசித்தனர்.

அரசின் திட்டப் பணிகள், ஆரோக்கியமான கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் வழங்குவது, ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுதல், நல்வாழ்வுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நல்ல உணவு பழக்கத்தை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் குறித்து இராசிபுரம் வட்டாரம் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சவிதா புத்தாக்கப் பயிற்சியளித்தார்.

இதில், வட்டார மேற்பார்வையாளர்கள் நாகரத்தினம் ஜெயபாரதி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், வட்டார திட்ட உதவியாளர் கார்த்தி மற்றும் அங்கன்வாடி மையப்பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பிள்ளாநல்லூர், பட்டணம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here