கும்பகோணம், ஏப். 18 –
கும்பகோணத்தில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ள சரவணனின் பிறந்தநாள் விழா சிறப்பாக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
மேலும், ஆலோசனை கூட்டத்தில் வருகிற 23-ஆம் தேதி சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் அருகில் 2 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்சி அலுவலகம் கட்டப்படுகிறது. இதில் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், உப்பு சத்தியாகிரகம் பாதையாத்திரை பயணம் தங்கபாலு தலைமையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த இக்கூட்டத்தில் ஆலோசனை நடைப்பெற்றது. அதுக்குறித்து அனைத்து உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில், இன்று பிறந்தநாள் காணும் மேயர் சரவணனனுக்கு மாலை மற்றும் பொன்னாடைகள் போர்த்தியும் அவருக்கு கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் பிரமாண்ட கேக் வெட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னை கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் மிசாவுதீன் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் இளைஞர் அணி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வட்டாரத் தலைவர்கள் அசோகன் பிரதாபன் பாலு சசிகுமார் விஜயகுமார் சார்லஸ் சீனிவாசன் மகிளா காங்கிரஸ் தலைவிகள் ஜீவா லதா செல்வி அல்ஜீரியா மாநில விவசாய பிரிவு செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.