கும்பகோணம், செப். 12 –

கும்பகோணத்தில் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, பாரம்பரியம் மிக்க அரிசி கண்காட்சி, சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கல் மற்றும் ஏழை மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் பாலாஜி கிரைண்டில் நடைபெற்றது. இதில் புதிய கிளப் தலைவராக பிஸ்மில்லா பேகமும், செயலாளராக மணிமேகலை ராஜேந்திரனும், துணைத் தலைவராக வச்சலா கருப்பண்ணன், துணைச் செயலாளராக லட்சுமி பிரபாகரன், பொருளாளராக இந்திராணி கிருஷ்ணன் ஆகியோருக்கு கிளப் மாவட்ட தலைவர் மோகன லதா சுந்தர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் ஒருங்கிணைப்பாளராக மகேஸ்வரிபாலா, மாவட்ட பொருளாளராக செல்வி இளங்கோ வைத்தியநாதன், வசந்தி, விஜயலட்சுமி ஆகியோரும், ஐஎஸ்ஓ வாக ஜெயந்தியும், மருத்துவர் மீனாட்சி ஆர்டினேட்டராகவும், அனு புவனேஸ்வரி மற்றும் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 23 நிர்வாகிகள் புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து சீர்காழி பொற்கொடி சித்ராவின் அடுப்பில்லாத சமையலில் இயற்கை வரகு அவல் லட்டு, புடலங்காய் கட்லெட், வாழைக்காய் பசும் பொறியல், வெண்பூசணி பச்சடி, கறிவேப்பிலை சாதம், பீர்க்கங்காய் சாதம், பரங்கிக்காய் சாதம், இனிப்பு தயிர் சாதம், மிளகு பொங்கல், இயற்கை பாயசம், இயற்கை ரோஸ் மில்க், இயற்கை ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை ஒரு மணி நேரத்தில் செய்து அசத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் காய்கறி பச்சையாக சாப்பிட்டால் அதனுடைய மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் வாரத்தில் ஒரு நாள் பச்சையாக உணவு சாப்பிட்டால் மருத்துவ செலவு இல்லாத ஆரோக்கியமான குடும்பம் உருவாக்க முடியும் என்றார். மேலும், வாழைக் காயை பச்சையாக சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகவும், ஹார்ட் அட்டாக் நெஞ்சு வலி போன்றவைகள் வராது எனவும், மேலும், பச்சையாக வெண்பூசணிக்காய் சாப்பிட்டால் ஜீரண மண்டலத்தை முழுமையாக அது பாதுகாக்கப்படும் அதனால் குடல் பிரச்சினை சரி செய்து விடுகிறது. என்று குறிப்பாட்டார். புடலங்காய் பச்சையாக சாப்பிட்டால் வாய்வு மண்டலத்தை பாதுகாக்கிறது மனம் சார்ந்த பிரச்சினை தூக்கமின்மை மூட்டு வலி பிரச்சனைகள் சரி செய்து விடும் இப்படி பல காய்கறிகளை பச்சையாக உண்ணும் போது, அதிலுள்ள பல மருத்துவ குணங்களால் பல்வேறு நோய்கள் தீரும் எனக்குறிப்பிட்டார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here