கும்மிடிப்பூண்டி, மே. 18 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக் குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்று வர, அம்மருத்துவமனை சார்பில் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க விழா நேற்று நடைப்பெற்றது.
தொடர்ந்து, நோயாளிகளுக்கான இச்சிறப்பு மிகு இலவச பேருந்து சேவையை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி, துணைத் தலைவர் கேசவன், வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சி.இ.ஓ . ஹரிகிருஷ்ணபாபு, உதவி மருத்துவ ஆய்வாளர் சதீஷ்தேவ், பொது மேலாளர் சிவநாதன், டி.எஸ்.ஓ.பிரியா சத்யா, விற்பனை மேலாளர், ஜானகிராமன், பி.ஆர்.ஓ.பாலாஜி, சரவணன் ஆகியோர் நோயாளிகளுக்கான முதல் பேருந்து பயணச் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மேலும் இத்துவக்க விழாவில், சுப்பு லட்சுமணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.
மேலும் இந் நோயாளிகளுக்கான இலவச பேருந்து சேவை தினசரி காலை 8.40 மணியளவில் துவங்கும் என இம்மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. இதனால் இதுவரை கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வர போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமத்தில் இருந்த உள் மற்றும் புற நோயளிகளுக்கு தற்போது அதுவும் இலவசமாக பேருந்தில் சென்று வர ஏற்பாடு செய்யபட்டுள்ள இச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றவாறு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.